🔴 அரசு அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான புகார்கள் – உடனடி நடவடிக்கை வழிமுறை
கிராம சேவகர் (GS) தொடர்பான அநியாயம், முறைகேடு, மோசடி அல்லது தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ தொடர்பு இலக்கங்கள் மூலம் உடனடியாக புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
📞 அரசாங்க புகார் தொடர்பு இலக்கங்கள்
- 1905 (அரசு உதவி சேவை)
- ஜனாதிபதி செயலகம்
011 235 4354
011 235 4655
011 248 4500 / 600 / 700
புகார் அளிக்கும் போது வழங்க வேண்டிய முக்கிய தகவல்கள்
- சம்பந்தப்பட்ட கிராம சேவகரின் முழுப் பெயர்
- அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு (GN Division)
- பிரதேச செயலாளர் பிரிவு
- மாவட்டம்
- நீங்கள் எதிர்கொண்ட பாதிப்பு விவரம் அல்லது
- GS மூலம் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / சட்டவிரோத செயல்கள் தொடர்பான தகவல்கள்
🗣️ மொழி வசதி
தமிழ் | சிங்களம் | ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் புகார்களை பதிவு செய்ய வசதி உள்ளது.
✅ அரசின் உறுதி
யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை.
உங்கள் உரிமையை முதலில் சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் கேட்டுப் பெறுங்கள்.
தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொலைபேசி இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் அளிக்கலாம்.
உங்கள் உரிமைக்கு உரிய நீதி காலதாமதமின்றி வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.
இந்த முக்கிய தகவலை பொதுமக்களின் நலனுக்காக பகிருங்கள்.


1.Mr.மதீனு
2.உப்புகாச்சிமடு
3.மூதூர்
4.திருகோணமலை
5.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலிஹா எனும் பெயருடைய எனது வீடு வெள்ள நீர் மற்றும் சேறால் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. 25000/=இழப்பீட்டு நிதிக்கான form பூர்த்தி செய்து அனுப்பியும் அந்த form ஐ குறித்த GS அதனை நிராகரித்துள்ளார். ஆகவே அதனை கவனத்தில் கொண்டு நிதியினை பெற்றுத் தருமாறு பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.